திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?
மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.
இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் என்பது தான் உண்மை.
மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம்.
ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும்.
அதை அழித்து விவசாயத்தை சீர்கெட வைக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் நிகழ்ந்தது மண்ணுளி பாம்புகளின் வேட்டை.
இந்த நிலையில் வயல்வெளிகளில் பயிரை நாசம் செய்யும் எலிகளை பிடித்து உண்ணும் நாட்டு பாம்பு வகையினங்களை அழிக்க மற்றுமொரு கும்பல் கிளம்பி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள பாம்பின் பறிமுதல் செய்யபட்டுள்ளது. விஷம் முறிக்கும் மருந்தாக பாம்பின் விஷம் பயன்படுத்தபட்டு வருகிறது. இதனால் பாம்பின் விஷத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது.
வழக்கமாக இதற்கெனவே பிரத்யேகமாக பாம்பு பண்ணைகள் உருவாக்கப்பட்டு அதிலிருந்து விஷம் பெறப்படும்.
தற்போது பல சமூக விரோதிகள் தமிழகத்தில் பாம்பின் விஷத்தினை எடுத்து கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் பாராசாத் பகுதியில் ரூ100 கோடி மதிப்புள்ள பாம்பின் விஷம் பறிமுதல் செய்யபட்டது.
பாம்பின் விஷத்தை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 3 பேரை பாதுகாப்புபடையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகத்தில் இருந்தும் பாம்புகள் சிலரின் மூலமாக அனுப்பி வைக்கப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக